News April 11, 2024

மோடி நெல்லை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

image

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்திற்கு தேர்தல் பரப்புரைக்காக வரும் 15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார். பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையிலான காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பிரதமரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Similar News

News February 13, 2026

நெல்லை இளைஞரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த பெண்கள்

image

நெல்லையை சேர்ந்த அஜித்குமார் (27) என்பவரிடம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜலெட்சுமி, சரோஜினி ஆகிய இருவரும் அரசின் சுகாதார துறையில் அஜித்குமாருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.8,00,000 பணத்தைப் பெற்று ஏமாற்றியுள்ளனர். அஜித்குமார் அளித்த புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சரோஜினி, ராஜலட்சுமி ஆகிய இருவரையும் இன்று கைது செய்தனர்.

News February 13, 2026

நெல்லை: 50 பவுன் நகை கொள்ளை; இருவர் கைது

image

கேரள மாநிலம் பந்தளம் பகுதியில் ஒரு வீட்டில் கடந்த ஜனவரி 21ம் தேதி 50 பவுன் நகை கொள்ளை போனது. இதுக்குறித்து கேரளா போலீசார் அந்தப்பகுதி செல்போன் சிக்னல் மூலம் கொள்ளையர்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் திருக்குறுங்குடி நம்பித்தலைவன் பட்டயத்தை சேர்ந்த இசக்கி ரமேஷ் (35), காவல்கிணறு விலக்கு கணேஷ் (27) ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

News February 13, 2026

நெல்லை : உங்களுக்கு ரூ. 5000 வரலையா ? – Apply லிங்க் !

image

நெல்லை மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ. 5000 வரலையா? இங்கு<> க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து மேல்முறையீடு பண்ணுங்க. 30 நாளில் நல்ல தீர்வு கிடைக்கும். இது எல்லாருக்கும் தெரிய SHARE பண்ணுங்க!

error: Content is protected !!