News November 14, 2025
மோடி அரசுக்கு கிடைத்த வெற்றி: அமித்ஷா

வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவது கட்டாயம் என்பதை பிஹார் மக்கள் நிரூபித்துள்ளனர் என அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் பிஹாரில் கிடைத்த ஒவ்வொரு வாக்கும் மோடி அரசின் மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றும் ஊடுருவல்காரர்கள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாகவும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 6, 2026
வார விடுமுறை.. சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

வார விடுமுறையை முன்னிட்டு, மக்கள் சிரமமின்றி சொந்த ஊர் செல்வதற்கு ஏதுவாக இன்று முதல் 3 நாள்களுக்கு 865 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், 1,000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் புக் செய்துள்ளனர். எனவே, சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளோர் உடனே இங்கே <
News March 6, 2026
CINEMA 360: மார்ச் 9-ல் ‘ஜன நாயகன்’ ரிவ்யூ!

*வரும் மார்ச் 9-ம் தேதி ‘ஜன நாயகன்’ படத்தை சென்சார் போர்டின் ரிவைசிங் கமிட்டி பார்க்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது *ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜெய், சுராஜ் ஆகியோரின் நடிப்பில் ‘டெக்ஸ்லா’ என்ற படத்தை இயக்கி வருகிறார் * துரந்தர் 2 படத்தின் டிரெய்லர் வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாகவுள்ளது *சுமார் ₹31.5 கோடி மதிப்பில் சென்னை போயஸ் கார்டனில் நடிகை நயன்தாரா வீடு வாங்கியுள்ளாராம்
News March 6, 2026
மேகதாது விவகாரம்.. தமிழகத்துக்கு பின்னடைவு

மேகதாது அணைக்கு எதிராக SC-ல் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. இது கர்நாடகாவுக்கு கிடைத்த வெற்றி என்று, பட்ஜெட் உரையில் அம்மாநில CM சித்தராமையா கூறியிருக்கிறார். அத்துடன், இத்திட்டம் தொடர்பாக புதிய திருத்தப்பட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் எனவும், விரைவில் அது மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.


