News April 15, 2024

மோடிக்கு வாக்களிக்காதீர்கள்: சீமான் பேச்சு

image

மயிலாடுதுறையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சிறப்புரையாற்றினார். அப்போது எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தயவுசெய்து மோடிக்கு வாக்களிக்காதீர்கள் என தெரிவித்தார். மேலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிறது பாஜக அரசு. ஒரே தேர்தல் நடத்தினால் நாட்டில் வறுமை ஒழிந்துவிடுமா எனவும், ஒரே நாடு என்றால் தண்ணீர் ஏன் நம் மக்களுக்கு கிடைக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

Similar News

News April 13, 2025

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரர் கோயில்

image

மயிலாடுதுறையில் புகழ்பெற்ற வைத்தீஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் சிவனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். சிவனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதியும், சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.

News April 13, 2025

மயிலாடுதுறை: சித்திரை சிறப்பு ஆதார் முகாம்

image

மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் சித்திரை மாதத்தை வரவேற்கும் வகையில், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும்,அதன் கீழ் இயங்கும் 20 துணை அஞ்சலகங்களிலும் வருகிற ஏப்.15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சித்திரை திருவிழா மேகா ஆதார் முகாம் நடைபெறவுள்ளது இந்த முகாமில் ஆதார் குறித்த அனைத்து சேவைகளும் வழங்கப்படுவதால், மக்கள் பயன்படுத்தி கொள்ளவும். SHARE பண்ணுங்க.

News April 13, 2025

மயிலாடுதுறையில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

image

மயிலாடுதுறையில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் உள்ள FIELD MANAGER பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள டிகிரி முடித்தவர்கள் இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க..

error: Content is protected !!