News November 25, 2025
மோசடி அரசியலை ஒழிப்பது தான் பாஜக திட்டம்

திராவிட அரசியலை பேசக்கூடிய கட்சிகளே இல்லை என்பதை உருவாக்குவதுதான் பாஜகவின் செயல் திட்டம் என திருமா பேசியதற்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். திராவிடம் என்பது நிலப்பரப்பு. திராவிடம் இந்தியாவின் அங்கம். அதை ஓர் இனமாக பிரித்து பேசி முன்வைக்க கூடிய திராவிட அரசியல் என்பது ஏமாற்று வேலை, மோசடி அரசியல். இதை ஒழிப்பதுதான் பாஜகவின் செயல்திட்டம் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News April 3, 2026
அண்ணாமலைக்கு வாய்ப்பு தராதது ஏன்? பியூஷ் கோயல்

அண்ணாமலைக்கு தேர்தலில் சீட் ஒதுக்கப்படாதது ஏன் என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. இந்நிலையில், குறிப்பிட்ட தொகுதி என்றில்லாமல் மாநிலம் முழுவதும் பணியாற்ற அண்ணாமலை விரும்பியதாக பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார். மாநிலத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள், வேட்பாளர்களின் விருப்பம் உள்ளிட்ட பல விஷயங்கள் வேட்பாளர் தேர்வில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
News April 3, 2026
மாம்பழத்திற்கு எதிராக களமிறங்கும் G.K.மணி மகன்

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்., – பாமக இடையே 3 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. பென்னாகரம் தொகுதியில், பாமகவின் பாடி செல்வத்தை எதிர்த்து காங்., சார்பில் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் களமிறங்குகிறார். மயிலாடுதுறையில் சித்தமல்லி பழனிசாமியை எதிர்த்து காங்., சின் ஜமால் யூனுஸ் முகமது, சோளிங்கரில் சரவணனை எதிர்த்து முனிரத்னம் மோத இருக்கின்றனர்.
News April 3, 2026
இந்தியாவின் இளம் நாயகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

பசி, தூக்கம் மறந்து நாட்டுக்காக தன்னலமற்று சேவையாற்றுபவர்கள் ஏராளம். அவர்களில் ஒரு மக்கள் நாயகனை இந்தியா இழந்துள்ளது. சிக்கிம் எல்லையில் பணியில் இருந்த உத்தரகாண்டை சேர்ந்த இளம் ராணுவ வீரர் விகாஷ் குமார்(24) இன்று காலமானார். ராணுவ மரியாதையுடன் அவரது உடல், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவரை போன்றவர்களின் தியாகம் என்றுமே போற்றுதலுக்குரியது. GREAT SALUTE


