News February 27, 2026

மோகன் பகவத் பேச்சால் சட்டம் மாற்றமா?

image

ராஜஸ்தானில், ஜனத்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட முடியாது என்ற சட்டம் 30 ஆண்டுகளாக அமலில் இருந்தது. தற்போது காலம் மாறிவிட்டதால் கட்டுப்பாட்டை நீக்குவதாக சட்ட அமைச்சர் ஜோகராம் கூறியுள்ளார். இந்துக்கள் குறைந்தது 3 குழந்தைகள் பெற வேண்டும் என மோகன் பகவத் கூறிய நிலையில், இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதாக காங்., சாடியுள்ளது.

Similar News

News February 27, 2026

MLA பதவியை ராஜினாமா செய்கிறாரா ஓபிஎஸ்?

image

OPS-ம், ஆதரவாளரான உசிலம்பட்டி ஐயப்பனும் தங்களது MLA பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, 3 முறை முதல்வராக இருந்த தான், புதிதாக தொடங்கிய கட்சியில் (தவெக) சேர்வதா என OPS கேட்டதாக ஆதரவாளர்கள் கூறுகின்றனர். எனவே, திமுகவில் இணைய அவர் முடிவெடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரது ஆஸ்தான ஜோதிடர் கணித்த இன்று (அ) நாளை (பிப்.28) திமுகவில் இணையலாம் என கூறப்படுகிறது.

News February 27, 2026

BREAKING: விலை ஒரேயடியாக மளமளவென குறைந்தது

image

வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது. தக்காளி 1 கிலோ ₹8 – ₹12 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தலா 1 கிலோ பீட்ரூட் – ₹10, பீன்ஸ் – ₹20, உருளைக் கிழங்கு – ₹13 – ₹15, வெங்காயம் – ₹10 – ₹15 என விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். அதேநேரம், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

News February 27, 2026

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்

image

சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் பிறந்த இவர், மத்திய பிரதேச ஐகோர்ட் நீதிபதியாக பணிபுரிந்தவர். மேலும், RBI, IT, மத்திய கலால் உள்ளிட்ட துறைகளில் ஆலோசகராகவும் அங்கம் வகித்தவர். 23.04.2025 முதல் கேரள ஐகோர்ட்டில் நீதிபதியாக இருந்து வருகிறார். ஐகோர்ட் தலைமை நீதிபதி MM ஸ்ரீவஸ்தவா வரும் 5-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

error: Content is protected !!