News January 19, 2026

மொபைல் பாஸ்போர்ட் சேவா வேன் சேவை – ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (ஜன.21)
புதன்கிழமை முதல், வாரத்தில் மூன்று நாட்கள் புதன், வியாழன் மற்றும்
வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் அடுத்த மூன்று வாரங்களுக்கு மொபைல் பாஸ்போர்ட் சேவா வேன் நிறுத்தப்படும்.இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.passportindia.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்திட ஆட்சியர் பிரசாந்த் அறிவுறுத்தியுள்ளார்

Similar News

News January 27, 2026

கள்ளக்குறிச்சி: குளிரால் ஏற்படும் முகவாதம் -உஷார்!

image

கள்ளக்குறிச்சி உட்பட தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது.குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது நீர் வடிதல், சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி, பேச்சில் தடுமாற்றம் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள்.SHARE IT

News January 27, 2026

கள்ளக்குறிச்சி: காதலன் கண்முன்னே துடிதுடித்த பலி!

image

கள்ளக்குறிச்சி அதிமுக நிர்வாகி ராஜசேகரின் மகள் அனீஷா (25). இவர் செங்கல்பட்டு மாவட்டம் ஏகாட்டூரில் தங்கி சட்டம் படித்து வந்தார். இவர் தனது காதலன் நித்தியானந்தத்திடம் வீடியோ காலில் பேசியவாறே, தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார், அனீஷாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 27, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஜன.26 இரவு முதல் இன்று (ஜன.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!