News January 23, 2025

மொபைல் பழுது நீக்கம் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

image

புதுச்சேரி லெனின் வீதியில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. பல்வேறு வேலை வாய்ப்பு தொடர்பாக, பயிற்சி அளிக்கும் இந்நிறுவனத்தில், மொபைல் போன், பழுது நீக்குதல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் (24ம் தேதி) ஆகும். பயிற்சி 27ம் தேதி துவங்குகிறது. பயிற்சியில் சேர, 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். SHARE NOW

Similar News

News January 23, 2025

நிர்வாண படத்தை அனுப்பி மிரட்டியவர் கைது

image

செல்போன் செயலின் மூலம் கடனை கொடுத்துவிட்டு, கொடுத்த தொகைக்கு மேல் பல மடங்கு பணத்தை கடன் வாங்கியவரின் படத்தை நிர்வாணமாக மாற்றி அனுப்பி மிரட்டி, இந்தியா முழுவதும் 300 கோடி ரூபாய்க்கு மேல் பொதுமக்களிடம் மிரட்டி கொள்ளையடித்த கும்பலைச் சார்ந்த முகமது ஷபி (32) என்பவர் கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் வைத்து புதுச்சேரி இணைய வழி காவல் ஆய்வாளர் கீர்த்தி தலைமையிலான போலீஸார் இன்று கைது செய்தனர்.

News January 23, 2025

காரைக்கால் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

image

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நடத்தும் இளைஞர்களுக்கான திறன் வளர்த்தல் பயிற்சி காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளது. இதில் “இயற்கை விவசாயம்” குறித்த பயிற்சி 10.02.2025 முதல் 15.02.2025 வரை ஆகிய 6 நாட்களிலும் நடைபெறவுள்ளது. பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து 07.02.2025 அன்றுக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 23, 2025

புதுவை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மைய துணை இயக்குநர் ஷ்வேதா விஸ்வநாதன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஆடவருக்கான கோ-கோ, கபடி, கையுந்து பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகளுக்கு புதுச்சேரி இலாசுப்பேட்டை பயிற்சி மையத்தில் தங்கியிருந்து பயிற்சி பெற தோ்வுகள் நடைபெறவுள்ளன 27, 28, 29 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் சேர்க்கைகான விண்ணப்பம் தேர்வு நாளன்று வழங்கப்படும்.