News January 13, 2026
மே 1-ம் தேதி காத்திருக்கும் ட்ரீட்!

அஜித்தின் கார் ரேஸிங் குறித்த ஆவணப்படம் தயாராகி வருவது தெரிந்த விஷயமே. இந்த ஆவணப்படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்களாம். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஹாலிவுட் தரத்திற்கு நிகராக இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளதால், OTT மார்க்கெட்டில் படத்துக்கு கடும் கிராக்கி நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News February 9, 2026
திமுக கூட்டணியில் குழப்பம்: டிடிவி

அதிமுக – பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையவிருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ‘ஆட்சியில் பங்கு’ என காங்கிரஸின் டிமாண்டை சுட்டிக்காட்டி திமுக கூட்டணியில் குழப்பம் உள்ளது; ஆனால், அதிமுக கூட்டணி தெளிவாக இருக்கிறது எனக் கூறிய அவர், 2026 தேர்தலில் NDA கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
News February 9, 2026
உயிரை காக்கும் ஊழியர்கள் பழிவாங்க படுகிறார்களா?

EMRI GHS நிர்வாகத்தில் பணியாற்றும் அவசர ஊர்தி (108) பணியாளர்களுக்கு கடந்த மாத ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியார் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த சேவைப் பணியில் பல ஆண்டுகளாக ஊழியர்கள் பழி வாங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், பலரின் உயிரை காக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள், தங்களின் வாழ்க்கையே மோசமாக இருப்பதாகவும் வேதனை தெரிக்கின்றனர்.
News February 9, 2026
பிப்ரவரி 9: வரலாற்றில் இன்று

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்
“மருதமலை மாமணியே முருகையா” என்ற பாடலைப் பாடி நடித்த மிகச்சிறந்த பாடகர் மதுரை சோமு பிறந்த தினம்
1984 – தமிழக பரதநாட்டியக் கலைஞர் தஞ்சாவூர் பாலசரஸ்வதி இறந்த தினம்
1996 – சிட்டி பாபு, தென்னிந்திய வீணைக் கலைஞர்
2001 – தமிழ் எழுத்தாளர் சாவி இறந்த தினம்
2012 – இந்திய இசைக்கலைஞர் எஸ். தட்சிணாமூர்த்தி


