News September 11, 2024
மோடியை விமர்சித்த 2 மாலத்தீவு அமைச்சர்கள் RESIGN

PM மோடியை விமர்சித்த 2 மாலத்தீவு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். 3 மாலத்தீவு அமைச்சர்கள், மோடியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தனர். இதையடுத்து, அவர்கள் மூவரையும் மாலத்தீவு அதிபர் முகம்மது மொய்சூ இடைநீக்கம் செய்திருந்தார். இதில் 2 பேர் பதவி விலகியுள்ளனர். மாலத்தீவு அதிபர் மொய்சூ விரைவில் இந்தியா வரவுள்ள நிலையில் 2 பேரும் பதவி விலகியிருப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது.
Similar News
News August 16, 2025
திமுக தலைவர்களை அச்சுறுத்த முடியாது: கனிமொழி

அமைச்சர் ஐ.பெரியசாமிக்குச் சொந்தமான இடங்களில் ED சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய கனிமொழி, IT, ED, CBI ஆகியவற்றை எதிர்க்கட்சிகளை தாக்கும் கருவியாக தொடர்ந்து பாஜக பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டினார். திமுக இதனை எதிர்கொள்ளும் என்ற அவர், இதுபோன்ற பயமுறுத்தல்களால் திமுக தலைவர்களை அச்சுறுத்த முடியாது என்றும் காட்டமாக தெரிவித்தார்.
News August 16, 2025
சஞ்சுவுக்கு அதிகரிக்கும் மவுசு.. போட்டியில் KKR?

சஞ்சு சாம்சன் RR அணியை விட்டு விலகுகிறார் என தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவர் CSK-ல் தான் இணைகிறார் எனக் கூறப்படும் நிலையில், அவரை தங்கள் பக்கம் இழுக்க KKR-ம் தயாராகியுள்ளது. ரகுவன்ஷி அல்லது ரமன்தீப் சிங் இருவரில் ஒருவரை ட்ரேட் செய்து சஞ்சுவை அணிக்கு கொண்டுவர KKR முயற்சிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. சஞ்சு எந்த டீமில் சேர வேண்டும் CSK or KKR.. நீங்க சொல்லுங்க?
News August 16, 2025
மசோதாக்கள் ஒப்புதலுக்கு காலக்கெடு: மத்திய அரசு பதில்

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் காலம் தாழ்த்துவது குறித்து TN அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், ஜனாதிபதி, கவர்னர்களுக்கு SC காலக்கெடு விதித்தது. இதற்கு எதிராக ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ வாதத்தில், ஜனாதிபதி, கவர்னர்களுக்கு காலக்கெடு விதிப்பது அரசமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.