News September 11, 2024
மேல்விஷாரம் நகர்மன்ற தலைவர் காலமானார்

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகர்மன்ற தலைவர் முகமது அமீன் காலமானார். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை காலமானார். இந்த செய்தி அறிந்த ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காந்தி மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முகமது அமீன், 4ஆவது வார்டு கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 3, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு ரோந்து பணி

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (03.09.2025) இரவு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய காவல்துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ராணிப்பேட்டை, அரக்கோணம், வாலாஜா, ஆற்காடு உட்பட 18 காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசர உதவிக்கு 9884098100 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
News September 3, 2025
சாலைக்காக நிலத்தினை பத்திர பதிவு செய்த விவசாயி

ராணிப்பேட்டை ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா இன்று (03.09.2025) அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம், புதுகேசாவரம் ஊராட்சிக்குட்பட்ட மாந்தோப்பு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த கிராமத்தில் 30 வருடங்களாக வசித்து வரும் 100 குடும்பங்களின் பயன்பாட்டிற்காக, சீதாராமன் மற்றும் கன்னிகம்மாள் என்ற இருவர் தங்கள் நிலத்தை சாலையாக தானமாக வழங்கியுள்ளனர். இவர்களது சமூகப்பணியை ஆட்சியர் பாராட்டினார்.
News September 3, 2025
சிமெண்ட் சாலையை திறந்து வைத்த ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்டம், புதுகேசாவரம் ஊராட்சி மாந்தோப்பு கிராமத்தில் 100 குடும்பங்களின் நீண்டகால கோரிக்கையான சாலை வசதி நிறைவேற்றப்பட்டது. இதற்கு இரண்டு நில உரிமையாளர்கள் 15 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினர். அரசுக்கு கிடைத்த இந்த நிலத்தில், ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் 8.62 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையை ஆட்சியர் சந்திரகலா திறந்து வைத்தார்.