News May 1, 2024
மேலூர் : தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி

மேலூர் அருகே கீழவளவு ஊராட்சியில் உள்ள குழிச்சேவல்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி அனிதா தம்பதியரின் மூன்றரை வயது குழந்தை தர்ஷன். இக்குழந்தை இன்று வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை விழுந்தது. சிறிது நேரம் கழித்த தாய் குழந்தை தேடிய போது குழந்தை தொட்டி நீரில் விழுந்து பலியானது தெரிந்தது.
Similar News
News April 6, 2026
மதுரை: அமைச்சர் பி.மூர்த்திக்கு ரூ.13.58 கோடி சொத்து

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், அமைச்சருமான பி.மூர்த்திக்கு ரூ.10.81 கோடி அசையா சொத்துகளும், ரூ.2.77 கோடி அசையும் சொத்துகளும் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் மூர்த்தியின் மனைவி செல்லம்மாள் பெயரில் ரூ.1.35 கோடி சொத்துகள் உள்ளன.
News April 6, 2026
மதுரை: சற்று நேரத்தில் சாத்தான்குளம் வழக்கில் தண்டனை

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து இன்று மாலை 5.30 மணியளவில் 9 போலீசாருக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுகிறது.
News April 6, 2026
மதுரை: பாதி வழியில் பெட்ரோல் தீர்ந்தால்.. இத பண்ணுங்க!

மதுரை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <


