News April 2, 2024
மேலூரில் ஒரு நிமிடம் மட்டுமே

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இன்று முதல் 16ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால் சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் முதியோர் ஊனமுற்றோர் நலன் கருதி இன்று முதல் 16ஆம் தேதி வரை மேலூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் இதைப்போல் மைசூர் எக்ஸ்பிரஸ் 15ஆம் தேதி வரை நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News April 9, 2025
தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் நாளை(ஏப்.10) மகாவீரர் ஜெயந்தி அன்று ஒருநாள் மட்டும் மூட ஆணையிடப்படுகிறது. கடை பணியாளர்கள் அனைவரும் மதுபான கடை மற்றும் மதுகூடம் மூடியிருப்பதை உறுதி செய்து கடையை கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என தூத்துக்குடி ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News April 9, 2025
தூத்துக்குடியில் வரையறுக்கப்பட்ட விடுப்பு – ஆட்சியர்

தூத்துக்குடி சாஸ்தா கோவில்களில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரம் அன்று மக்கள் குலதெய்வ வழிபாடு நடத்துவது வழக்கம். இந்தாண்டு ஏப்.11 அன்று பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்று அரசு அலுவலர்கள் விடுமுறை கோரும்பட்சத்தில் எவ்வித மறுப்பும் இன்றி அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும். மேலும் அன்று தேர்வு இல்லாதா மாணவர்கள், ஆசிரியர்கள் விடுப்பு கேட்டால் வழங்க வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News April 9, 2025
தூத்துக்குடி அருகே அடித்துக் கொலை

தூத்துக்குடி அருகே மேககூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் மது போதையில் தனது மைத்துனர் ரமேஷ் வீட்டிற்கு சென்று 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் வீட்டின் சொத்து பத்திரத்தை கேட்டு ரமேஷின் தாயாரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் கட்டையை எடுத்து வேல்முருகனை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.