News September 23, 2025
மேலப்பாளையம் பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி விலக்கு அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விழுந்து கிடப்பதாக தீயணைப்பு துறையினருக்கு இன்று ( செப்.23 ) காலை தகவல் கிடைத்தது. தகவல் பெறப்பட்டு பாளையங்கோட்டை தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து சென்று பார்க்கையில் அந்த நபர் ஏற்கனவே இறந்து கிடந்தது தெரியவந்தது இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 23, 2025
நெல்லை மாவட்டத்தில் 9 துணை பிடிஒ மாற்றம்

பாளையங்கோட்டை யூனியன் தலைமை இடத்து துணை பிடிஒ ராமலட்சுமி களக்காட்டிற்கு மாற்றப்பட்டார். வள்ளியூர் துணை பிடிஓ ராஜேஸ்வரி ராதாபுரத்திற்கும் இந்தப் பணியில் இருந்த வெங்கடேஷ் வள்ளியூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதுபோல் மாவட்ட முழுவதும் மொத்தம் ஒன்பது துணை பிடிஓ அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் சுகுமார் பிறப்பித்துள்ளார்.
News September 23, 2025
நெல்லை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

நெல்லை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <
News September 23, 2025
நெல்லை: ஆட்டோ மோதி சிறுவன் உயிரிழப்பு

சுத்தமல்லி வஉசி நகரை சேர்ந்த 7 வயதுடைய சுடர் செல்வம் என்ற சிறுவன் அவருடைய உறவினருடன் பைக்கில் நேற்று சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று திடீரென பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சிறுவன் சுடர் செல்வம் பலத்த காயமடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். நள்ளிரவில் சிறுவன் சுடர் செல்வம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.