News October 25, 2025
மேம்பாட்டு திட்ட பணி ஆட்சியர் அப்துல் ரஹ்மான் ஆய்வு

விழுப்புரம் நகராட்சியில் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழைய நகராட்சி அலுவலகத்தை புனரமைத்து திருமணம் மண்டபம் மற்றும் வணிக வளாகம் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாக இயக்குநர் ப.மதுசூதனன் ரெட்டி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Similar News
News January 25, 2026
குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

இந்தியாவில் 77 வது குடியரசு தினம் நாளை (ஜன.25) இந்தியா முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி இந்தியா முழுவதும் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் விழுப்புரத்தில் போலீசார் விழா நடைபெறும் இடம், மற்றும் மக்கள் கூடும் இடங்களான ரயில்வே நிலையம் மற்றும் பேருந்து நிலையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
News January 25, 2026
விழுப்புரம்: விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

விழுப்புரம் விவசாய மக்களுக்கு தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள மின்மோட்டார் பம்பு செட் மானியத் திட்டம்,தற்போது அமலில் உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்பு செட் வாங்க ரூ.15,000 மானியம் வழங்கி வருகிறது.இதில்,விண்ணப்பிக்க தாங்கள் சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர்,வேளாண்மைப் பொறியியல் துறையில் தகுந்த ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.ஷேர் பண்ணுங்க
News January 25, 2026
விழுப்புரம் அருகே கொடூர விபத்து!

திண்டிவனம் வட்டம், அகூர், புது காலனி, முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சு.ரவிச்சந்திரன்(55) இவர், வெள்ளிக்கிழமை இரவு தனது மனைவி சுமதி மகள் சுபாஷினி ஆகியோருடன் பைக்கில் அகூர் அருகே சென்றார். அப்போது அங்கு வந்த தனியார் சொகுசுப் பேருந்து பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சுமதி உயிரிழந்த நிலையில் வெள்ளி மேடு பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


