News July 25, 2024
மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்வு

கடந்த ஜூலை 6-ஆம் தேதி அன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39 அடியாக இருந்து, 9 நாட்களில் 46.18 அடி உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1 வருடத்திற்கு பிறகு 90 அடியை எட்டியது. மேலும், வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் அணையின் நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து விணாடிக்கு 23,331 கனஅடியில் இருந்து 28,856 கனஅடியாக உயர்ந்துள்ளது.
Similar News
News March 3, 2026
சேலத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி!

சேலம் 4 ரோடு சாமுண்டி வளாகத்தில் நாளை மார்ச் 04 முதல் 13 வரை தங்க நகை மதிப்பீட் டாளர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் தங்கம் விலை கணக்கிடுதல், கடன் தொகை வழங்கும் முறை, ‘ஹால்மார்க்’ தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். 8ம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.பயிற்சி முடித் தவர்கள் கூட்டுறவு, தனியார் வங்கிகள், நகை அடகு நிதி நிறுவனங்களில் பணியில் சேரலாம்.விவரங்களுக்கு: 94437 28438
News March 3, 2026
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகராட்சியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.
News March 3, 2026
சேலம் காவல்துறை எச்சரிக்கை

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் இணையவழி நிதி மோசடிகளைத் தடுக்கப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்பின் தெரியாத நபர்களிடம் OTP உள்ளிட்ட ரகசியத் தகவல்களைப் பகிர வேண்டாம் எனவும், சந்தேகமான அழைப்புகள் குறித்து விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை மோசடி ஏற்பட்டால், உடனடியாக 1930 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


