News August 3, 2024
மேட்டூர் அணையில் அமைச்சர் ஆய்வு

சேலம், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அணையின் வலது, இடது கரை மற்றும் 16 கண் மதகு பாலம் ஆகிய பகுதிகளுக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். அணைக்கான நீர்வரத்து, அணையின் பாதுகாப்பு குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News October 27, 2025
சேலம் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு!

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்.27) “நாம் ஹெல்மெட் அணிவது நமக்காக மட்டும் அல்ல, நம்மை நேசிப்பவர்களுக்காகவும்.
கட்டாயம் ஹெல்மெட் அணிந்து, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுங்கள்.” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல்துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்!
News October 27, 2025
சேலம்: ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி!

சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், சேலம் மாநகர காவல் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் ஊழல் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இன்று 27.10.2025 ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர். பொது சேவையில் நேர்மை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என உறுதியெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
News October 27, 2025
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் குறைதீர் முகாம்!

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (அக்.27) திங்கட்கிழமை மக்கள் குறைதீர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்ற வருகிறது. இதில் குடிநீர் வசதி, கல்லூரி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, திருமண தொகை மற்றும் இதர வசதிகள் வேண்டி பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


