News June 15, 2024
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (ஜூன் 15) காலை 43.10 அடியிலிருந்து 42.87 அடியாக சரிந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 2-வது நாளாக வினாடிக்கு 149 கன அடியாக நீடிக்கிறது. அணையின் நீர் இருப்பு 13.61 டிஎம்சியாக உள்ளது.
Similar News
News May 7, 2025
சேலம் மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ.4.85 கோடி வரி வசூல்!

சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்கள் சொத்து வரியினை ஏப்ரல் 30- ஆம் தேதி வரை செலுத்தினால் 5% ஊக்கத்தொகை (அ) ரூபாய் 5,000 வரை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடைசி நாளான நேற்று ஒரே நாளில் ரூபாய் 4.85 கோடி வரி வசூலானதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநகராட்சிக்கு சொந்தமான கடை வாடகை உள்ளிட்டவை ரூபாய் 52.05 லட்சம் வசூலாகியுள்ளது.
News May 7, 2025
சேலம்: இன்றைய இரவு ரோந்து போலிசார் விவரம்

சேலம் மாவட்டத்தில் இன்று (மே 1) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
News May 7, 2025
சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, மதுரை-பெங்களூரு சிறப்பு ரயில் (06522) இன்று (மே 01) காலை 09.10 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில், 03.50 மணி நேரம் தாமதமாக மதியம் 01.00 மணிக்கு புறப்படும். இதனால் சேலம் ரயில் நிலையத்திற்கு மதியம் 02.20 மணிக்கு வர வேண்டிய இந்த ரயில் மாலை 06.10 மணி வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.