News October 21, 2024
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து உயர்வு
இன்று (அக்.21) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 15,929 கனஅடியில் இருந்து 18,094 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 97.89 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 62.14 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
Similar News
News November 20, 2024
சேலத்தில் நாளை இங்கு மின்தடை
சேலம் மாவட்டத்தில் நாளை(21.11.24) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் அஸ்தம்பட்டி, சங்ககிரி, உடையாப்பட்டி, தும்பல் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை(21.11.24) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே, இத்துணை மின் நிலையத்தின் கீழ் உள்ள ஊர்களில் மின்தடை ஏற்படும் என அறிவித்துள்ளது.
News November 20, 2024
சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்
சேலம் மாவட்டத்தில் இன்றைய (நவ.20) நிகழ்ச்சிகள்: 1)காலை 9 மணி – அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி. 2) புனித பால் மேல்நிலைப்பள்ளிகாலை 9 மணிக்கு உலக உணவு தினத்தை ஒட்டி விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நவதானிய உணவு கண்காட்சி நடைபெறுகிறது. 3) காலை 10 மணிக்கு அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன், அமைச்சர் ராஜேந்திரன் பங்கேற்கின்றனர்.
News November 20, 2024
சேலம்: கிராம சபைக் கூட்டம் தேதி அறிவிப்பு
சேலம் மாவட்டத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவ.23ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். கிராம கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளது.