News December 27, 2025

மேட்டுப்பாளையம் அருகே பயங்கர விபத்து

image

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பேருந்து மற்றும் லாரிக்கு இடையே இருசக்கர வாகனம் சிக்கி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் பைக்கை ஓட்டி வந்த முதியவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News January 2, 2026

கோவையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️கோவை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0422-2200009 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)

News January 2, 2026

மேட்டுப்பாளையத்தில் திடீர் ரத்து

image

நீலகிரியில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் மலை ரயில் பாதையில் ஹில்குரோவ் – குன்னூர் ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் மரங்கள், பாறை விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது. இதனால் இன்று ஒரு நாள் காலை 7:10 மணிக்கு புறப்படும் ரெகுலர் மலை ரயில் மற்றும் 9.10 மணியளவில் புறப்படும் சிறப்பு மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News January 2, 2026

சூலூர் அருகே பரபரப்பு! சாலையில் கிடந்த அம்மன் சிலை

image

சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில் அயோத்தியாபுரம் குடியிருப்பு பகுதியில் சாலையோரம் அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் அங்கே வைத்து வழிபட முடிவு செய்தனர். ஆனால் அங்கு வந்த வட்டாட்சியர் சிலையை பொதுமக்களிடமிருந்து எடுத்து சென்று கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்தனர். இது பற்றி சூலூர் போலீசார் விசாரணை செய்கின்றனர்

error: Content is protected !!