News April 2, 2026

மேக்கப் பிரஷில் ஒளிந்திருக்கும் ஆபத்து.. பெண்களே உஷார்!

image

மேக்கப் பிரஷை யூஸ் பண்ணிட்டு, கிளீன் செய்யாமல் வைப்பது மிகவும் ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். சரியாக கழுவாமல் அப்படியே வைத்துவிட்டு, அதே பிரஷை மீண்டும் உபயோகப்படுத்துவது முகப்பரு, ஸ்கின் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தலாம். கிளீன் செய்யாமல் வைக்கப்படும் பிரஷ்களில் பாத்ரூம் பேசினில் இருப்பதை விட அதில் அதிகமான பாக்டீரியாக்கள் உருவாகுவதாகவும் எச்சரிக்கப்படுகிறது. இனிமே கொஞ்சம் கவனமா இருங்க!

Similar News

News April 8, 2026

தமிழக தேர்தல்: ₹462 கோடி பறிமுதல்

image

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததுமுதல் நேற்றுவரை ₹462.74 கோடி மதிப்பு பணம், பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. ₹92.07 கோடி ரொக்கப் பணம், ₹2.04 கோடி மதிப்புள்ள மதுபானம், ₹75.76 கோடி மதிப்புள்ள போதைப்பொருள், ₹214.38 கோடி தங்கம் & வெள்ளி, ₹78.49 கோடி மதிப்புள்ள இலவச பரிசு பொருள்களை பறக்கும்படை பறிமுதல் செய்துள்ளது.

News April 8, 2026

இனி 4 ஆண்டு B.Sc, B.Ed படிப்பு கிடையாது

image

பட்டப்படிப்புடன் ஆசிரியர் பயிற்சியும் இணைந்த ஒருங்கிணைந்த 4 ஆண்டு B.Sc, B.Ed மற்றும் B.A, B.Ed படிப்புகளை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) வழங்கிவந்தது. இப்படிப்புகள் 2026-27 கல்வியாண்டு முதல் நிறுத்தப்படுவதாக TNTEU அறிவித்துள்ளது. மேலும், கல்வியியல் கல்லூரிகள் இந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை மேற்கொண்டால் எந்த விதத்திலும் TNTEU பொறுப்பேற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2026

இவர்களிடம் இருந்து விலகி இருங்க: ரஜினி அட்வைஸ்

image

நடிகர்களின் வாகனத்தை பின் தொடராமல் இளைஞர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என மறைமுகமாக விஜய் ரசிகர்களை ரஜினி அறிவுரை கூறியுள்ளார். படிக்கிற நேரத்தில் படிக்க வேண்டும்; அதை விட்டுவிட்டால் ரொம்ப கஷ்டப்படுவீர்கள் எனக்கூறிய அவர், மது, கஞ்சா போன்றவற்றை இளைஞர்கள் தொடவே கூடாது என்றார். மேலும், போதைப் பழக்கத்தோடு நண்பர்கள் யாராவது இருந்தால் அவர்களிடம் இருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தினார்.

error: Content is protected !!