News November 22, 2025
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: EPS

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளதாக EPS குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்றும், அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்தியா கூட்டணியில் உள்ள CM ஸ்டாலின், ராகுல், சோனியா காந்தியிடம் பேசி சுமுகமான முடிவை எடுக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News February 7, 2026
வோடபோன் ஐடியா சூப்பர் பிளான் அறிமுகம்!

வோடபோன் ஐடியா (Vi) ‘நான்-ஸ்டாப் ஹீரோ’ என்ற புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அன்லிமிட்டட் அழைப்புகள் மற்றும் 4G/5G டேட்டா & ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் ₹365(28 நாள்கள்), ₹649(56 நாள்கள்), ₹979(84 நாள்கள்) திட்டங்களுடன் அதிவேக இணையத்தை அனுபவிக்க முடியும். சில திட்டங்களில் அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் போன்ற OTT சலுகைகளும் அடங்கும்.
News February 7, 2026
2 தொகுதிகளில் விஜய் போட்டியா?

தவெக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் நேற்று தொடங்கியது. விஜய் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என பலர் விருப்ப மனு அளித்து வரும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் 2 தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி கிழக்கு, விருகம்பாக்கம் (அ) வேளச்சேரி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
News February 7, 2026
காய்கறிகள் விலை கணிசமாக குறைந்தது

சென்னை உள்பட பல நகரங்களில் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் வழக்கமாக ₹50 வரை விற்பனையாகும் 1 கிலோ தக்காளி, தற்போது ₹20-க்கு விற்கப்படுகிறது. அதேபோல், 1 கிலோ வெங்காயம் ₹25-க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பீட்ரூட், சுரைக்காய், புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் சரிந்துள்ளது. மதுரை, நெல்லை உள்ளிட்ட நகரங்களிலும் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.


