News November 4, 2025

மெஹுல் சோக்சியை நாடு கடத்துவதில் சிக்கல்?

image

நாடு கடத்தப்படுத்துவதற்கு எதிராக பெல்ஜியம் சுப்ரீம் கோர்ட்டில் மெஹுல் சோக்சி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த விசாரணை நடைபெறும் வரை, நாடு கடத்தப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு வக்கீல் கென் விட்பாஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக, மெஹுல் சோக்சியை நாடு கடத்த ஆன்ட்வெர்ப் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. PNB வங்கியில் ₹13,000 கோடி கடன் வாங்கிவிட்டு அவர் பெல்ஜியம் தப்பி சென்றார்.

Similar News

News November 4, 2025

BREAKING: அதிமுகவில் மீண்டும் இணைந்தார்

image

OPS அணியை சேர்ந்த வட சென்னை மாவட்ட செயலாளர் P.S.சிவா, EPS முன்னிலையில் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்து கொண்டார். அதேபோல், OPS அணியின் மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் சாய் அருனேஷ், RK நகர் பகுதிச் செயலாளர் விஜயகுமார், வட சென்னை மாவட்ட பேரவை செயலாளர் முருகன் உள்ளிட்டோரும் அதிமுகவில் இணைந்துள்ளனர். திமுக வலுவாக உள்ள வட சென்னையை அதிமுக கைப்பற்ற தீவிரமாக பணியாற்றி வருகிறது.

News November 4, 2025

இன்னும் சற்று நேரத்தில் வருகிறது.. HAPPY NEWS

image

2025 – 2026 கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை இன்று(நவ.4) காலை 10 மணிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட உள்ளார். அடுத்தாண்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால், கடந்த ஆண்டை விட முன்னதாகவே பொதுத்தேர்வு தேதிகள் இருக்கும் என கூறப்படுகிறது. தேர்வு அட்டவணையை எதிர்நோக்கி பல லட்சம் மாணவர்கள், பெற்றோர் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

News November 4, 2025

Cinema Roundup: இன்று ‘பராசக்தி’ பாடல் புரமோ ரிலீஸ்

image

*’பராசக்தி’ படத்தின் முதல் சிங்கிள் புரமோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. *ராம் சரணின் ‘PEDDI’ படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் Chikiri Chikiri என்ற பாடலை உருவாக்கியுள்ளார். *’பாகுபலி தி எபிக்’ 3 நாள்களில் 38.9 கோடி வசூலித்துள்ளதாக தகவல். *’ஜெயிலர் 2′ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நிறைவு. *ஆலியா பட் நடிக்கும் ‘ஆல்ஃபா’ ரிலீஸ் ஏப்ரல் 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

error: Content is protected !!