News December 13, 2025

மெஸ்ஸியிடம் மன்னிப்புக்கேட்ட மம்தா!

image

சால்ட் லேக் மைதானத்துக்கு வந்த மெஸ்ஸி, கொஞ்ச நேரத்திலேயே புறப்பட்டுவிட்டார். ஏற்பாட்டாளர்களே அவரை சூழ்ந்து நின்றதால் அவரை பார்க்க முடியாமல் கடுப்பான ரசிகர்கள் <<18551245>>மைதானத்தை சூறையாடினர்.<<>> இந்த நிகழ்வின் நிர்வாக குறைபாடை கண்டு அதிர்ச்சியடைந்ததாக மே.வங்க CM மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்காக மெஸ்ஸி மற்றும் ரசிகர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும், இதுபற்றி விசாரணை நடத்த குழு அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 23, 2025

மீண்டும் மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

image

தமிழகத்தில் இன்றுமுதல் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இன்று டெல்டா, தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 29-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையும் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்பிருப்பதாகவும் IMD குறிப்பிட்டுள்ளது. உங்க ஊரில் இப்போ மழையா?

News December 23, 2025

2026 தேர்தலில் விஜய் ஒரு Spoiler: பியூஸ் கோயல்

image

பாஜக மையக்குழு கூட்டத்தில் பேசிய பியூஷ் கோயல் விஜய் ஒரு Spoiler என குறிப்பிட்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 தேர்தலில் தவெக பெறும் வாக்குகள் மற்ற கட்சிகளின் வெற்றி, தோல்வியை கெடுக்கும் விதமாக இருக்கும் என்றும், விஜய் பெறும் வாக்குகளால் NDA கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணியாற்ற வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு பியூஷ் கோயல் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

News December 23, 2025

‘ரேஷன் கடைகளில் மலிவு விலையில் தங்கம் விற்பனை’

image

ரேஷன் கடைகளில் தங்கம், வெள்ளி நகைகளை மலிவு விலையில் விற்குமாறு ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் நலச் சங்க தலைவர் லிங்கபெருமாள் வலியுறுத்தியுள்ளார். CM தனிப்பிரிவில் அவர் அளித்துள்ள மனுவில், விலை உயர்வால் கல்லூரி செல்லும் ஏழை மாணவிகள் சிறிதளவு நகை கூட அணிய முடியாத நிலை உள்ளது. இதனால், கூட்டுறவு வங்கி, ரேஷன் கடையில் மலிவு விலையில் தங்கம், வெள்ளி நகைகளை விற்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!