News December 17, 2025
மெஸ்ஸிதான் குற்றவாளி: சுனில் கவாஸ்கர்

கொல்கத்தாவில் நடைபெற்ற <<18551245>>மெஸ்ஸியின் <<>>நிகழ்ச்சி பெரும் கலவரத்தில் முடிந்தது. இதனையடுத்து ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஏற்பாட்டாளர்கள் மீது பழி சுமத்துவது தவறு என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஒரு மணி நேரம் இருப்பதாக ஒப்புக்கொண்டு ரசிகர்களை ஏமாற்றிய மெஸ்ஸிதான் உண்மையான குற்றவாளி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 17, 2025
BREAKING: முட்டை சாப்பிடுவோர் கவனத்திற்கு..

முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் என பரவி வரும் செய்தியால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கத்தின் சுந்தர்ராஜ் விளக்கமளித்துள்ளார். முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் என பரவும் தகவல் வெறும் வதந்தி. நைட்ரோபியூரானுக்கு உலகளாவிய தடை விதிக்கப்பட்டுள்ளது எனக் கூறிய அவர், முட்டைகள் எப்போதும் பாதுகாப்பாகவே உள்ளதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
News December 17, 2025
சாலைகள் ஏன் கருப்பு நிறத்தில் போடப்படுகின்றன தெரியுமா?

உலகில் எங்கு சென்றாலும், சாலைகள் கருப்பு நிறத்திலேயே போடப்பட்டிருப்பதன் காரணம் தெரியுமா? சாலை போட பயன்படுத்தப்படும் நிலக்கீல் (Bitumen) கருப்பு நிறம் கொண்டது. ஆனால், இது மட்டுமே காரணமில்லை. கருப்பு நிறம் அதிக சூரிய ஒளியை உறிஞ்சுகிறது. எனவே, மழைக்குப் பிறகு சாலைகளில் நீர் விரைவாக ஆவியாகி, சாலைகயின் வழுக்கும் தன்மை குறைகிறது. அதே போல, இந்த நீலக்கீல் சாலைகளை போடவும், பராமரிக்கவும் செலவு மிக குறைவு.
News December 17, 2025
காந்தியை கொலை செய்ததை விட கொடிய செயல்: ப.சி.,

காந்தி பெயரை அழித்து விட்டு புதிய சட்டம், திட்டம் (100 நாள் வேலை) செயல்படுத்துவோம் என்பது காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல் என ப.சி., கண்டித்துள்ளார். காந்தி மீது அவர்களுக்கு எவ்வளவு வெறுப்பு, காழ்ப்புணர்வு என்பதை இந்த ஒரு செயலே அம்பலப்படுத்துகிறது எனக் கூறிய அவர், இந்திய வரலாறு 2014-ல் தொடங்கியது என பறைசாற்றியவர்கள், இன்னும் எத்தனை கொடுமைகளை செய்வார்கள் என பார்க்கலாம் என்று சாடியுள்ளார்.


