News December 15, 2025
மெஸ்ஸிக்கு ₹200 கோடி; இந்திய கால்பந்துக்கு எவ்வளவு?

மெஸ்ஸியின் இந்திய பயணத்துக்கு ₹200 கோடி செலவானதாம். இவரின் 3 நாள் நிகழ்ச்சிக்கு இத்தனை கோடி செலவு செய்யும் நிறுவனங்களும், அரசும், இந்தியாவில் கால்பந்தை மேம்படுத்த இவ்வளவு செலவிட்டிருந்தால், இங்கேயும் மெஸ்ஸிகள் உருவாகி இருப்பார்கள். உலக தரவரிசையில் 142-வது இடத்தில் இருக்க மாட்டோம். கால்பந்து வளராததற்கு கிரிக்கெட்டை மட்டுமே குறை கூறாமல், வேறு வழியில் சிந்திக்க வேண்டியது இன்றைய தேவை. உங்க கருத்து?
Similar News
News December 18, 2025
அந்தரங்க போட்டோ.. டீச்சர்கள் வசமாக சிக்கினர்

தஞ்சாவூரில் உதவி HM, கணித ஆசிரியையின் அந்தரங்க போட்டோக்களை வெளியிடுவதாக மிரட்டிய டிரெயினிங் ஆசிரியர்கள் கைதாகியுள்ளனர். அரசு பள்ளியின் உதவி HM செல்போனை திருடிய டிரெயினிங் டீச்சர்கள் கலை சாரதி, இனியவர்மன் இருவரும் ₹5 லட்சம் கேட்டு மிரட்டினர். உதவி HM போலீசில் புகார் அளித்ததை அடுத்து 2 பேரும் கம்பி எண்ணுகின்றனர். மேலும், தகாத முறையில் பழகியதாக உதவி HM, கணித ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
News December 18, 2025
இந்திய குடியுரிமையை துறந்த 20 லட்சம் பேர்

கடந்த 2011 முதல் 2024 வரையிலான 14 ஆண்டுகளில், 20 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கொரோனாவிற்கு பிறகான கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், சராசரியாக ஆண்டுக்கு 2 லட்சம் பேர் குடியுரிமையை துறந்துள்ளதாகவும் கூறியுள்ளது. தனிப்பட்ட தேவைகளுக்காக வெளிநாடுகளுக்கு குடிபெயரவே அவர்கள் இவ்வாறு செய்ததாகவும் தெரிவித்துள்ளது.
News December 18, 2025
விஜய் அதிமுகவில் இணைந்து விடலாம்: செம்மலை

ஈரோடு பரப்புரையில் எம்ஜிஆர் குறித்து பேசிய விஜய், அதிமுகவை மறைமுகமாக விமர்சித்தார். இந்நிலையில், எம்ஜிஆர், பற்றி பேசும் விஜய் அதிமுகவில் இணைந்து விடலாமே என்று செம்மலை பதிலடி கொடுத்துள்ளார். விஜய் பேச்சை நாங்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை எனக் கூறிய அவர், பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டதாக அர்த்தமாகி விடாது; திமுகவிற்கு மாற்று எப்போதும் அதிமுகதான் என்று தெரிவித்துள்ளார்.


