News June 8, 2024
மெரினா கடற்கரைக்கு செல்ல கட்டுப்பாடு

மெரினா கடற்கரையில், மக்களை இரவு 10 மணிக்கு மேல் இருக்கக் கூடாது எனக் கூறி காவல் துறையினர் அப்புறப்படுத்துவதாக சமூக ஆர்வலர் ஜலீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், சென்னை மாநகர காவல் சட்டம் 41ன் படி பொது இடங்களில் கூடுவதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்க அதிகாரம் உள்ளது என காவல்துறை சார்பில் கூறப்பட்டது. இதனால், இனியும் இந்த நேரக் கட்டுப்பாடுகள் தொடரும்.
Similar News
News September 14, 2025
கொளத்தூர்: தண்ணீர் பிடிக்க சென்ற பெண்ணிடம் அத்துமீறல்

சென்னை, கொளத்தூர், எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் வசிக்கும் 25 வயது பெண் 08.09.2025 அன்று காலை வழக்கம் தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராமதாஸ்(61) என்பவர் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் இராஜமங்கலம் காவல் நிலைய போலிசார் ராமதாஸ்(61) என்பவரை நேற்று (செப்.13) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News September 14, 2025
சென்னை: B.E./B.Tech போதும் ரூ.1.60 லட்சம் சம்பளம்!

சென்னை மக்களே, Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 14, 2025
சென்னை மாநகராட்சி சொத்து வரி செலுத்த அறிவுரை

2025-26 நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்துமாறு மாநகர் சென்னை மாநகராட்சி (GCC) சொத்து உரிமையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. உரிய நேரத்தில் வரி செலுத்துவதன் மூலம், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998, பிரிவு 84(2)-ன் படி விதிக்கப்படும் மாதாந்திர அபராத வட்டியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று GCC தெரிவித்துள்ளது