News October 25, 2024
மெய்சிலிர்க்க வைக்கும் தஞ்சாவூர் அரண்மனை

தஞ்சை அரண்மனை கி.பி 1650-ல் மராத்தியா் மற்றும் நாயக்கா்களால் கட்டப்பட்டது. இது பெரியக்கோட்டை மற்றும் சின்னக்கோட்டை என்று இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை 110 ஏக்கா் பரப்பளவில் தஞ்சை நாயக்கா்களின் கடைசி மன்னரான விஜயராகவ நாயக்கரால் கட்டப்பட்டது. இந்த அரண்மனையில், ஒரு நூலகம், அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம் ஆகியவையும் அமைந்துள்ளன. நீங்கள் தஞ்சை அரண்மனைக்கு சென்றது உண்டா? SHARE!
Similar News
News February 15, 2026
தஞ்சை: ரூ.2.10 லட்சம் மானியம்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News February 15, 2026
தஞ்சை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

தஞ்சை மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்க!
News February 15, 2026
தஞ்சை: இனி ஒரு மிஸ்டு கால் போதும்!

தஞ்சை மக்களே கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும். அதற்கு Bharatgas: 77150 12345, HP: 94936 02222, Indane: 84549 55555 ஆகிய எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதற்கு சிலிண்டர் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்துதான் மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.!


