News November 19, 2025
மெட்ரோ விவகாரத்தில் பொய் பிரசாரம்: தமிழிசை

மதுரை, கோவை மெட்ரோ திட்ட விவகாரத்தில் பொய் பிரசாரம் செய்யப்படுவதாக தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார் . தமிழக அரசு தயாரித்து அனுப்பிய அறிக்கையில் தவறு இருப்பதால்தான் <<18322918>>விளக்கம்<<>> கேட்கப்பட்டுள்ளது. ஆனால், மெட்ரோ ரயில் வராது என்பதுபோல், ஆளும் கட்சியினர் தவறான தகவலை பரப்புகின்றனர் என சாடிய அவர், நேரடியாக PM-ஐ சந்தித்து மனு அளிக்க வாய்ப்புள்ளபோதும், CM ஸ்டாலின் ஏன் கடிதம் எழுதுகிறார் என கேள்வி எழுப்பினார்.
Similar News
News March 26, 2026
தங்கம் விலை சவரனுக்கு ₹30,000 குறைந்தது

ஜனவரி இறுதியில் புதிய உச்சமாக தங்கம் 1 சவரன் ₹1,34,400-க்கு விற்பனையானது. அதன் பின்னர், ஏற்ற இறக்கமாக கண்ணாமூச்சி ஆடிய தங்கம் விலை, தற்போது சுமார் ₹30,000 வரை குறைந்துள்ளது. இப்போது, 1 சவரன் ₹1,06,800 ஆக உள்ளது. தங்கம் விலை மேலும் குறையுமா, தற்போது வாங்கலாமா என மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், தங்கம் விலை சில வாரங்களுக்கு சரிந்து பின் மீண்டும் உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
News March 26, 2026
234 தொகுதிகளிலும் போட்டியிட தயார்: வேல்முருகன்

தேர்தல் நெருங்கும் நிலையில் தவாக வேல்முருகன் தலைமையில் புதிய அணி மலர்ந்துள்ளது. ஜனநாயக புலிகள், எழுச்சி தமிழர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல கட்சிகள், இயக்கங்கள் தவாகவுக்கு ஆதரவளித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இவர்களுடன் இணைந்து 234 தொகுதிகளிலும் களமிறங்குவது பற்றி ஆலோசித்து வருவதாகவும், இதனால் பலரின் தூக்கம் கெடும் என்றும் அவர் பேசியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
பொன்முடிக்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகும்படி, பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட் சம்மன் அனுப்பி இருந்தது. இதை எதிர்த்து அவரது தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணைக்கும் பொன்முடி நேரில் ஆஜராவதற்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.


