News July 26, 2024
மெட்ரோ வழித்தடத்திற்கு ரூ.1.74 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்து

பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரையிலான மெட்ரோ வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை M/s Aarvee Associates, Architects, Engineers & Consultants Pvt நிறுவனத்திற்கு ரூ.1.74 கோடி மதிப்பில் கையெழுத்தானது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
Similar News
News March 3, 2026
பள்ளிக்கரணை சதுப்பு நிலம்: NGT உத்தரவை எதிர்த்து வழக்கு

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி 1 கி.மீ. சுற்றளவில் புதிய கட்டுமானங்களுக்கு ஒப்புதல் வழங்க தேசிய பசுமை தீர்ப்பாய (NGT) தடை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், 3 வாரங்களில் தமிழக அரசு மற்றும் பெருநகர வளர்ச்சி குழுமம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பாய உத்தரவால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
News March 3, 2026
சென்னையில் இப்படி ஒரு கோயிலா? கண்டிப்பா போங்க!

சென்னை அடையாறு அருகில் அமைந்துள்ளது மத்திய கைலாஷ் என்று அழைக்கப்படும் ஆனந்த விநாயகர் கோயில். இக்கோவிலில், “ஆத்யாந்த பிரபு” என்ற தனித்துவமான சிலை உள்ளது. இந்த சிலை வலதுபுறம் 50% விநாயகர் சிலையாகவும், 50% அனுமன் சிலையாகவும் உள்ளது. நவக்கிரக தோஷத்திலிருந்து விடுபட இங்கு பக்தர்கள் வழிபடுகிறார்கள். விநாயகர் மீது நேரடியாக கற்பூரம் ஏற்றி வைக்க இங்கு அனுமதிக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.
News March 3, 2026
சென்னை: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் அலுவலர் வேலை!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <


