News March 22, 2024
மெட்ரோ ரயில் திட்டம்! புதிய தகவல்

மதுரை மெட்ரோ ரயில் திட்டம், மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக ஆர்டிஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது. மதுரையில் முதல் கட்டமாக திருமங்கலம் – ஒத்தக்கடை வரை 32 கி.மீ. தூரத்துக்கு வழித்தடம் அமைக்கப்படுகிறது. பணியின் நிலை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு திட்ட அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் நிலையில் விரைவில் பணி துவங்கும் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 30, 2026
மதுரை: நாளைய மின்தடை பகுதிகள்

கோரிப்பாளையம், தல்லாகுளம், நரிமேடு, போஸ் வீதி, குலமங்கலம் மெயின் ரோடு, மாட்டுத்தாவணி, கே.கே.நகர், அண்ணா நகர், மேலமடை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலணி, சூர்யா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். குருவிக்காரன் சாலை, அரவிந்த் மருத்துவமனை & கருப்பாயூரணி, மேலூர், வாடிப்பட்டி, பைபாஸ், திருமங்கலம் ஆகிய பகுதிகளின் சுற்றுவட்டாரம் முழுவதும் நாளை(ஜன.31) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை. *ஷேர்
News January 30, 2026
மதுரை: பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் சடலம்

மதுரை, யாகப்பா நகரை சேர்ந்தவர் மோகன்(59). இவர் மனைவி இறந்த நிலையில் (குழந்தைகள் இல்லாதவர்) வழிப்பு, மூல நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரது அண்ணன் கணேசன் வீட்டில் தங்கியிருந்தார். அண்ணன் வீட்டார் குடும்பத்துடன் சென்னை சென்ற நிலையில் பூட்டியிருந்த வீட்டில் துர்நாற்றம் வீசியது. இந்த புகாரின் பேரில் போலீசார் கதவை உடைத்து பார்த்த போது மோகன் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
News January 30, 2026
மதுரை: வாகனங்களில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா?

வாகன உரிமையாளர் வாகனத்தை விற்க, பரிசளிக்க or மரணத்திற்குப் பின் உரிமை மாற்ற விரும்பினால், வாகன வகைக்கு ஏற்ப RTO அல்லது STA மூலம் உரிமை மாற்றம் செய்யலாம். ஆம்னி பஸ் தவிர அனைத்திற்கும் RTO அதிகாரம் உடையது. உரிமையாளர் மரணமடைந்தால், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் & NOC அவசியம். செகண்ட் ஹாண்ட் வாகனங்கள் 14 நாட்களுக்குள் உரிமையாளர் பெயர் மாற்றம் செய்வது கட்டாயம். பெயர் மாற்றம் செய்ய <


