News January 14, 2026
மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு…

சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை (15.01.2026) மற்றும் ஜன.16, 17 தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை சேவை தொடரும். காலை 5–12 மணி மற்றும் இரவு 8–10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், மதியம் 12–இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10–11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும். ஷேர் பண்ணுங்க
Similar News
News January 26, 2026
சென்னை: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

சென்னை மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். (நல்ல தகவலை SHARE பண்ணுங்க)
News January 26, 2026
சென்னை: குளிரால் ஏற்படும் முகவாதம் -உஷார்!

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது நீர் வடிதல், சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி, பேச்சில் தடுமாற்றம் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க
News January 26, 2026
சென்னையில் நிறம் மாறும் அதிசய லிங்கம்

சென்னை அயனாவரத்தில் பிரசித்தி பெற்ற பரசுராம லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பரசுராமர் சிவனை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும், இங்குள்ள சிவ லிங்கம் ஆவணி- மார்கழி மாதம் வரை கருப்பு நிறமாகவும், பங்குனி- ஆடி மாதம் வரை பொன் நிறமாகவும் காட்சியளிக்கிறது. இங்கு வந்து வழிபட்டால், பாவங்கள் நீங்கி லிங்கம் நிறம் மறுவதுபோல் வாழ்க்கையில் மாற்றம் நிகழும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.


