News November 22, 2025

மெட்ராஸ் HC வாயில்கள் மூடல்.. ஏன் தெரியுமா?

image

மெட்ராஸ் HC-ன் அனைத்து வாயில்களும் நாளை இரவு 8 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் HC கட்டப்பட்டதால் அதன் வளாகத்தை வழிப்பாதையாக மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் வளாகத்தை மக்கள் உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக HC-ன் வாயில்கள் வருடத்தின் ஒரு நாள் மூடப்படுகின்றன. இது நவ. இறுதி வாரத்தில் பின்பற்றப்படுகிறது.

Similar News

News January 25, 2026

நோ காஸ்ட் EMI… எச்சரிக்கும் நிபுணர்கள்!

image

நம்மில் பலரும் ‘No Cost EMI’ மூலம் ஆன்லைனில் பொருட்களை வாங்கினால், வட்டி இருக்காது என நினைக்கிறோம். ஆனால், பொருட்களின் விலையில் வட்டி சேர்க்கப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக, செயலாக்க கட்டணம் + ஜிஎஸ்டியை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் அதிக கால EMI காரணமாக, கடன் பயன்பாட்டு விகிதம் அதிகரித்து CIBIL ஸ்கோர் குறையலாம் எனவும் எச்சரிக்கின்றனர்.

News January 25, 2026

பாரதியார் பொன்மொழிகள்

image

*எந்த ஏற்றத்துக்கும் ஓர் இறக்கம் உண்டு; எந்த துன்பத்திற்கும் ஓர் இறுதி உண்டு; எந்த முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு. *விழும் வேகத்தை விட எழும் வேகம் அதிகமாக இருந்தால் தோற்கடிக்க அல்ல உன்னைப் பார்க்கவே எவனும் பயப்படுவான். *சொல்வது தெளிந்து சொல் செய்வது துணிந்து செய். *உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும். *மனதில் உறுதி வேண்டும்.

News January 25, 2026

மனிதர்களை மிஞ்சும் ரோபோக்கள்: எலோன் மஸ்க்

image

டெஸ்லாவின் ‘ஆப்டிமஸ்’ ரோபோக்கள் 2027-ம் ஆண்டின் இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு வரும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். டாவோஸில் பேசிய அவர், தற்போது தொழிற்சாலைகளில் எளிய பணிகளைச் செய்து வரும் இந்த ரோபோக்கள், விரைவில் மனிதர்களை மிஞ்சி வகையில் சிக்கலான வேலைகளையும் செய்யும் என்றும், விற்பனைக்கு வரும்போது, அவை மிக உயர்ந்த பாதுகாப்புடன் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!