News May 12, 2024
மெட்டல் டிடெக்டர் மூலம் அதிகாரிகள் ஆய்வு

நெல்லை மாவட்டம் திசையன்விளை கரைச்சுத்து புதூரில் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் எரிந்து சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் மீண்டும் இன்று (மே.12) தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நேற்று அங்கு டார்ச்லைட் கிடைக்கப் பெற்ற நிலையில் இன்று 10 பேர் கொண்ட தடவியல் துறை அதிகாரிகள் குழு அவர் பிணமாக மீட்கப்பட்ட பகுதியில் வேறு எதுவும் தடயங்கள் உள்ளதா? என மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ஆய்வு செய்தனர்.
Similar News
News December 30, 2025
நெல்லை: இளம்பெண்களிடம் ரூ.19 லட்சம் மோசடி

வள்ளியூரை சேர்ந்த அபிராமி (29) என்ற பெண் இன்ஸ்டாகிராமில் வந்த வீட்டிலிருந்து படி வேலை விளம்பரத்தை நம்பி அவர்கள் தெரிவித்த தகவல்களின்படி பல கட்டமாக ரூ.9 லட்சத்து 45 ஆயிரம் கட்டி ஏமாற்றம் அடைந்தார். இதுபோல் இடிந்த கரையைச் சேர்ந்த அஸ்வினி (33) என்பவர் ஆன்லைன் பகுதி நேர வேலை என்ற விளம்பரத்தை நம்பி ரூ.9,50,000 பறி கொடுத்துள்ளார். இருவரும் அளித்த புகாரை நெல்லை சைபர் க்ரைம் போலீசார் விசாரக்கின்றனர்.
News December 30, 2025
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
News December 29, 2025
திருநெல்வேலி: போஸ்ட் ஆபீஸ் வேலை அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30,000 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உள்ளூர் மொழியை எழுதவும், பேசவும் தெரிந்த 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <


