News August 14, 2024

மூவண்ணக் கொடியில் மிளிரும் நாகூர் தர்கா மினாரா

image

நாட்டின் 78ஆவது சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் பெரிய மினாரா வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. நாகூர் தர்கா நிர்வாகத்தின் சார்பாக தர்காவின் பெரிய மினாராவில் மூவர்ண நிறத்தில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு, ஜொலித்து காணப்படுவதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து செல்கின்றனர்.

Similar News

News September 13, 2025

நாகையில் விஜய் பரப்புரைக்கு மேலும் சிக்கல்

image

நாகையில் தவெக தலைவர் விஜய் வருகிற செப்.20நம் தேதி பரப்புரைக்கு அவுரி திடலில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாற்று இடமாக புத்தூர் ரவுண்டானா, அபிராமி சன்னதி திருவாசல் காடம்பாடி ஐடிஐ வளாகம் என மூன்று இடங்களை தாவெகவினர் தேர்வு செய்த கொடுத்தனர். அந்த இடங்களிலும் போதுமான இடவசதி இல்லை என அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தவெகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News September 13, 2025

நாகையில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்; எஸ்பி புதிய தகவல்

image

நாகை மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் செப்.20ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த நிலையில், இன்று அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் மாவட்ட எஸ்பி செல்வக்குமார் இதற்கான அனுமதி மறுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். தவெக மாவட்ட செயலாளர் சுகுமாரன் சார்பில் 7 இடங்களுக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், இடம் தேர்வு தொடர்பான பரிசீலனை முடிந்த பின் இறுதி அனுமதி வழங்கப்படுமென தெரிவித்துள்ளார்.

News September 13, 2025

நாகை மக்களே.. ரூ.30,000 மாத சம்பளத்தில் வேலை!

image

நாகை மக்களே.. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Engineer/ Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து செப்.28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க…

error: Content is protected !!