News September 3, 2025
மூளைக்காய்ச்சல் நீலகிரி மக்களே உஷார்!

கேரளாவில் அமீபிக் மூளைக் காய்ச்சலுக்கு 3பேர் இறந்துள்ளனர். பருவ நிலை மாற்றத்தால் குழந்தைகளுக்கு தொண்டை வலிகாய்ச்சல் அதிகரித்துள்ளதால் தங்களது குழந்தைகளுக்கு அமீபிக் மூளைக் காய்ச்சல் இருக்குமோ என பொது மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. சுகாதாரமற்ற நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்த்தல், வெண்ணீர் பருகவேண்டும். அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என நீலகிரி மருத்துவர்கள் எச்சரிக்கை. SHAREit
Similar News
News November 12, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

நீலகிரி மாவட்ட வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் மாதாந்திர கூட்டம் நவம்பர் 14, 2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு உதகை கேர்ன்ஹில் வன அலுவலகம், பொருள்விளக்க மைய கட்டிடத்தில் நடைபெறுகிறது. நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் தங்கள் பகுதி குறைகளை நேரில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
News November 12, 2025
கூடலூர் ஜீன்பூல் மலையேற்றம்: க்யூ ஆர் கோட் வெளியீடு

தமிழ்நாட்டில் மலையேற்றம் செல்ல ஆர்வமாக உள்ளவர்களுக்காக அரசு சார்பில் ‘டிரக் தமிழ்நாடு’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 40 இடங்களில் மலையேற்றம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 12 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தற்போது கூடலூர் ஜீன்பூல் தாவர மையத்திலிருந்து இரு வழி பயணமாக எட்டு கிலோமீட்டர் பயண வழிகாண க்யூ ஆர் கோட் வெளியிடப்பட்டுள்ளது.
News November 11, 2025
நீலகிரி: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

நீலகிரி மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க!)


