News August 23, 2025
மூன்று மாநில நிலப்பகுதிகளால் சூழப்பட்ட புதுவை

புதுவை என அழைக்கப்படும் புதுச்சேரி, ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படாத புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம் உள்ளிட்ட நான்கு பகுதிகளை உள்ளடக்கியது. இதில், புதுச்சேரியும், காரைக்காலும் தமிழ்நாடு மாநிலத்தின் நிலப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. மாகே கேரளா மாநிலத்தின் நிலப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. ஏனம் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் நிலப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.
Similar News
News August 23, 2025
புதுவை: ITI போதும் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் (BHEL) காலியாக உள்ள எலெக்ட்ரிஷியன், பிட்டர், வெல்டர் உள்ளிட்ட 515 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஐடிஐ படித்த 27 வயதுக்குட்பட்ட (SC/ST- 32, OBC-30) நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News August 23, 2025
பாகூர் மூலநாதர் கோயிலில் இ-உண்டியல் சேவை!

புதுவை, பாகூரில் உள்ள 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோயிலில், பக்தர்களின் வசதிக்காக இ-உண்டியல் சேவையை நேற்று (ஆக.22) எம்.எல்.ஏ செந்தில்குமார் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கோயில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மேலாளர், மார்க்கெட்டிங் மேலாளர், பாகூர் கிளை மேலாளர், உதவி மேலாளர் மற்றும் பாகூர் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
News August 22, 2025
புதுச்சேரி: மன அமைதி வேண்டுமா? இங்கு செல்லுங்கள்!

புதுச்சேரியில் நம்பர் ஒன் ஆன்மிகத் தலமாக மட்டுமின்றி, நம்பர் ஒன் சுற்றுலா தலமாகவும் மணக்குள விநாயகர் ஆலயம் திகழ்கிறது. நாட்டிலேயே விநாயகருக்கு தங்கத்தால் ஆன மூலஸ்தான கோபுரம் இங்கு மட்டும்தான் உள்ளது. விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும்தான் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மக்களே இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால் உடல், மன ஆரோக்கியம் மேம்படும், மன அமைதி கிடைக்கும், பாவங்கள் குறையும். SHARE பண்ணுங்க!