News January 28, 2026

மூன்று பக்கமும் முட்டி மோதும் OPS

image

தனது ஆதரவாளர்கள் பலரும், ஒவ்வொரு கட்சியில் தஞ்சம் அடைந்துவிட்ட நிலையில் OPS தற்போது புது ரூட்டை பிடித்துள்ளார். திமுகவிடம் தான் கைகாட்டும் 5 பேருக்கு சீட் கொடுங்க என்றும், தவெகவிடம் எனக்கு கட்சி பொறுப்பை தாண்டி பெரிய இடம் வேண்டும் என்றும் கேட்டுள்ளராம். இதுபோக, NDA பக்கம் சாய்ந்த TTV-யிடம், 3 பேருக்கு மட்டும் சீட் கொடுங்க, நாங்க குக்கர் சின்னத்துலேயே நிற்கிறோம் என்று தகவல் கொடுத்துள்ளராம்.

Similar News

News February 11, 2026

Upper birth-ல் பயணித்த விநாயகர்!

image

பாரத் கெளரவ் டூரிஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிய பயணிகள் அரிய காட்சி ஒன்றை கண்டுள்ளனர். அந்த ரயிலில் ஸ்லீப்பர் கோச்சில், Upper birth-ல் கடவுள் விநாயக பெருமான் அழகாக வீற்றிருந்தார். அவருக்காக அங்கு குட்டி கோயில் ஒன்றே கட்டப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக யாரும் இந்த பெர்த்தில் பயணிக்காததால், அது தற்போது கடவுளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தினமும் இரு வேளைகள் விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும் நடக்கிறதாம்.

News February 11, 2026

₹222 சேமித்தால், ₹4.5 லட்சம் கிடைக்கும் திட்டம்!

image

பெரிய ரிஸ்க் இல்லாத சிறிய முதலீடு மற்றும் சேமிப்புக்கு அஞ்சலக RD ஒரு சிறந்த திட்டம். இதில் தினமும் ₹222 சேமித்தால், தற்போதைய வட்டி விகிதமான 6.7% அடிப்படையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு சுமார் ₹4.5 லட்சம் கிடைக்கும். தொடர்ந்து 10 ஆண்டுகள் இதனை நீட்டித்தால் ₹11 லட்சம் வரை பெறலாம். இந்த கணக்கை தொடங்க, அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகுங்கள். SHARE.

News February 11, 2026

BIG NEWS: அமைச்சர் பதவியை பறிக்க CM ஸ்டாலின் முடிவு!

image

அமைச்சர் காந்தியின் பதவியை பறிக்க CM ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு அரசு விழாவில் நேரடியாகவே காந்தி மீது ஸ்டாலின் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். நேற்று ராணிப்பேட்டையில் நடைபெற்ற டாடா தொழிற்சாலை திறப்பு விழாவில் அமைச்சர் காந்தியை CM, புறக்கணித்துவிட்டு அமைச்சர்கள் நேரு, ராஜா, MP ஜெகத்ரட்சகன் உடன் குழு போட்டோ எடுத்துக்கொண்டது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!