News June 4, 2024
மூன்று சட்டமன்ற தொகுதிகளில் திமுக முன்னிலை

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்து இவிஎம் இயந்திரத்தின் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. இதில் திருச்செந்தூர், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரத்தில் திமுக அமைப்பாளர் கனிமொழி முன்னணியில் உள்ளார்.
Similar News
News September 12, 2025
தூத்துக்குடி பைக் மோதி விபத்து – ஒருவர் பலி

தூத்துக்குடி தெர்மல்நகர் சுனாமி காலனியை சேர்ந்த பிரகாஷின் நண்பர் முருகன், அவரது உறவினர் ஜெயமுருகனை பேருந்து நிலையத்திற்கு பைக்கில் அழைத்து சென்றபோது விபத்தில் சிக்கினர். பைக் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியதில் படுகாயமடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுக்குறித்து தெர்மல்நகர் காவல்துறையினர் விசாரணை.
News September 12, 2025
குலசேகரன்பட்டினத்தில் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக பிரபு பாஸ்கரன் என்பவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பகுதியில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News September 11, 2025
முத்து நகர் பீச்சில் நாளை முதல் கடல் கொண்டாட்டம் நிகழ்ச்சி

சூரிய அஸ்தமனக் காட்சியை பிரமிக்க வைக்கும் மிக அழகிய கடற்கரை இடங்களில் ஒன்றான முத்து நகர் கடற்கரை வேடிக்கை, ஓய்வு, சாகசத்தின் சரியான தொகுப்பாக உள்ளது. இங்கு நாளை(செப்.12) முதல் செப்.14 வரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் கடல் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கயாக், படகுபோட்டி, கடல்நீச்சல் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை காண பொதுமக்களுக்கு அனுமதி உண்டு. SHARE IT