News April 20, 2024
மூன்றாவது முறையாக மோடி பிரதமராக தொடர்வார்!

திண்டிவனம் மரகதாம்பிகை அரசு பள்ளி வாக்கு சாவடி மையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற தேர்தலில் தனது ஜனநாயக கடமையான வாக்குபதிவினை இருமகள்கள் சம்யுக்தா, சஞ்சித்ரா, சங்கமித்ரா ஆகியோருடன் இணைந்து வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார்.அதனை தொடர்ந்து பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், மூன்றாவது முறையாக மிகப்பெரிய வெற்றி பெற்று பிரதமராக மோடி தொடர்வார் என தெரிவித்தார்.
Similar News
News February 10, 2026
விழுப்புரத்தில் துடிதுடித்து பலி!

வி.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவர், புதுச்சேரி மாநிலம், திருவண்டார்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம், இவர் தனது பைக்கில் சென்னை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது. நடுவே இருந்த தடுப்புச் சுவரில் எதிர்பாராத விதமாக மோதினார். இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 10, 2026
விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News February 9, 2026
கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு!

விழுப்புரம் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், அறிவுறுத்தலின்படி தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு மாநில நெடுஞ்சாலைகள்) த.அம்பாயிரநாதன் தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை இன்று (பிப்.09) ஏற்றுக்கொண்டனர். உடன் விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


