News January 25, 2025
மூத்த குடிமக்களுக்கு உபகரணம் வழங்கும் தேதி அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் மத்திய அரசின் Rastriya Vayosri Yojana (ராஸ்டிரிய வயோஸ்ரீ யோஜனா) திட்டத்தின்கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முத்த குடிமக்களுக்கு மடக்கும் விதமான சக்கர நாற்காலி சிறப்பு நடைபயிற்சி உபகரணம் வழங்கும் விழா தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பத்தூரில் 28ஆம் தேதி, நாட்றம்பள்ளியில் 29ஆம் தேதி, வாணியம்பாடியில் 30ஆம் தேதி, ஆம்பூரில் 31ஆம் தேதி வழங்கப்படும்.
Similar News
News November 8, 2025
திருப்பத்தூர் பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் <
News November 8, 2025
திருப்பத்தூர்: ரயிலில் அடிபட்டு கொடூர பலி!

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே ஏரிப்பட்டறை சேர்ந்தவர் கணேசன்(வயது 65) கூலி தொழிலாளியான இவர் நேற்று (நவ.7) இரவு ஜோலார்பேட்டை அடுத்த வளத்துார் மேலாளத்துார் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 8, 2025
திருப்பத்தூரில் காவலாளியை அடித்துக் கொலை!

திருப்பத்தூரில் உள்ள கோல்டன் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வரும் பாச்சல் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்கின்ற அலிஜான் (65) என்பவரை மற்றொரு காவலாளி கார்த்திக் என்பவர் இன்று (நவ.8) காலை அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.


