News March 1, 2026

மூண்ட போர்.. இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

image

ஈரான் – USA போரால், இவ்விரு நாடுகளுடனும் நட்புறவில் உள்ள இந்தியா 4 முக்கிய பிரச்னைகளைச் சந்திக்கவுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கச்சா எண்ணெய் உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தங்கம் விலை அதிகரிப்பு, ஈரானில் இந்திய முதலீடு செய்துள்ள சபாஹர் துறைமுகத் திட்டம் & வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு ஆகிய பாதிப்புகளை இந்தியா எப்படி சமாளிக்க போகிறது என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

Similar News

News March 4, 2026

பெண்களை போதை பொருளாக பாக்கும் திமுகவினர்: TTV

image

விமானப் பணிப்பெண்ணிடம் திமுக நிர்வாகி <<19289115>>அத்துமீறியதை <<>>சுட்டிக்காட்டி அக்கட்சியை TTV கடுமையாக விமர்சித்துள்ளார். விமானத்திலும் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது தான் திமுகவின் சாதனை என சாடியுள்ளார். பெண்களை போகப் பொருள்களாக மட்டுமே பார்க்கும் திமுகவினரை ஸ்டாலின் உடனடியாக ஒடுக்கத் தவறினால், வரும் தேர்தலில் அனைத்து மகளிரும் திமுகவுக்கு சம்பட்டி அடி கொடுப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 4, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News March 4, 2026

வளைகுடா நாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள்!

image

இஸ்ரேல், US தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்கி வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் பஹ்ரைன், ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு மீன்பிடி வேலைக்கு சென்ற தமிழக மீனவர்களின் நிலைமை மோசமாக உள்ளது. அடிக்கடி குண்டு சத்தம், உணவு பற்றாக்குறையால் தவித்து வருவதாக கூறியுள்ள அவர்கள், இந்தியாவுக்கு பாதுகாப்பாக திரும்ப PM மோடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!