News February 19, 2026
மூட்டு வலி நீங்க இந்த கஷாயம் குடிங்க!

கை, கால், கழுத்து & மூட்டு வலி நீங்க இந்த கஷாயத்தை பருகும் படி, சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ➤தேவை: வரமல்லி, சீரகம், சோம்பு ➤செய்முறை: மேலே குறிப்பிட்ட மூன்றையும் தண்ணீரில் போட்டு, மிதமான தீயில் 3-5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி காலையில் குடித்து வந்தால், மூட்டு வலியை நீக்குவதுடன், அஜீரண கோளாறில் இருந்தும் நிவாரணம் பெறலாம். அனைத்து நண்பர்களுக்கும் இதை பகிரவும்.
Similar News
News February 19, 2026
புதிய கட்சியை அறிமுகம் செய்த பண்ருட்டி ராமச்சந்திரன்!

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன், MGR அதிமுக என்ற தனது புதிய கட்சியை அறிமுகம் செய்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் தொடங்கியுள்ள இந்த புதிய அமைப்பு தேர்தலுக்கானது அல்ல; மக்களுக்கானது என்றார். 1977-ல் MGR-ன் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அவர், அண்ணாதுரை, ஜெயலலிதா, விஜயகாந்த், OPS ஆகியோருடன் பயணம் செய்தவராவார்.
News February 19, 2026
தேர்தலில் போட்டியா? திவ்யா சத்யராஜ்

திமுக அரசு அளித்துள்ள மகளிர் உரிமை தொகை ரொம்ப நல்ல விஷயம் என திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் பேசிய அவர், தான் தேர்தலில் வெல்வதற்காக அரசியலுக்கு வரவில்லை. மக்கள் பணி செய்வதற்காகத்தான் வந்திருக்கிறேன் என கூறினார். அதேநேரம் தேர்தலில் எல்லோருடனும் சேர்ந்துகொண்டு மக்கள் பணி செய்ய உள்ளதாகவும் பேசியுள்ளார். தற்போது திமுகவின் ஐடி விங் துணை பொதுசெயலாளராக திவ்யா சத்யராஜ் உள்ளார்.
News February 19, 2026
FLASH: விலை ₹50, 000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஜாக்பாட் தள்ளுபடியை டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹25,000 முதல் அதிகபட்சமாக ₹85,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன மாடல் கார்கள், அதன் விலை என்ன, எவ்வளவு சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பதை மேலே உள்ள போட்டோஸை இடப்பக்கமாக ஸ்வைப் செய்து பாருங்கள். புக்கிங் செய்ய இப்போதே திட்டமிடுங்கள். SHARE IT.


