News January 3, 2026
மூக்கடைப்பு இருக்கா? இதை செய்தாலே சரியாகும்!

குளிர்காலம் வந்துவிட்டால் போதும் சளி, இருமலை போலவே மூக்கடைப்பு பிரச்னைகளும் ஏற்படும். வீட்டிலேயே இதனை சரி செய்யலாம். ➤திக்கான காட்டன் துணியை எடுத்துக் கொள்ளுங்கள் ➤அதை மடித்து, சூடான நீரில் நனைத்துக் கொள்ள வேண்டும் ➤மிதமான சூட்டில் இருக்கும்போது மூக்கின் மேல் வைத்து ஒத்தடம் கொடுங்கள். இப்படி செய்யும் போது மூக்கை சுற்றி ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மூக்கடைப்பு நீங்கும். அனைவருக்கும் SHARE IT.
Similar News
News January 10, 2026
பள்ளிப்பாளையத்தில் பதறும் மக்கள்!

நாமக்கல்|: பள்ளிப்பாளைய அருகே உள்ள வெப்படை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாகத் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சவுதாபுரத்தில் ஆடுகள் திருட்டு, பூட்டியிருந்த நூற்பாலையில் காப்பர் ஒயர்கள் திருட்டு எனத் அடுத்தடுத்த தொடர் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இப்பகுதியில் இரவு நேரப் போலீஸ் ரோந்து பணியைத் தீவிரப்படுத்த கோரிக்கை!
News January 10, 2026
ரூட்டை மாத்துகிறாரா ராமதாஸ்?

<<18806660>>ஸ்டாலினின் ஆட்சி நன்றாகதான்<<>> உள்ளது என நேற்று ராமதாஸ் பேசியுள்ளது கூட்டணிக்கான அச்சாரமாக இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர். கடந்த 29-ம் தேதி சேலத்தில் நடைபெற்ற செயற்குழுவில் ஆட்சி மாற்றம் நிச்சயம் நடக்கும் என ஸ்ரீகாந்தி பேசினார். ஆனால், அன்புமணி, அதிமுகவுடன் கைகோர்த்ததால் அதற்கு எதிரான அணியில் இணைய ராமதாஸ் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்கள் கருத்து என்ன?
News January 10, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 உயர்வு!

22 கேரட் தங்கம் இன்று(ஜன.10) கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹12,900-க்கு விற்பனையாகிறது. 8 கிராம் கொண்ட சவரன் ₹800 உயர்ந்து ₹1,03,200-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தில் இருப்பதால், இந்திய சந்தையில் கடந்த 2 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,200 அதிகரித்து மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளது.


