News October 16, 2025

முஸ்லிம் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

2025-2026ம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 மாணவர்களுக்கு தலா ரூ.36 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க ரூ.3.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்திலுள்ள சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 16, 2025

நாகை: கல்வி கடன்பெற இணையதள முகவரி!

image

வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் சிறுபான்மையின முஸ்லிம் மாணவ, மாணவியர் 2025-26ம் ஆண்டிற்கு கல்வி கடன் பெறுவதற்கு www.bcmbcmw.tn.gov.in/welfshemesminorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 31ஆம் தேதிக்குள் ஆணையர் சிறுபான்மையினர் நலத்துறை சென்னை 5 என்ற முகவரிக்கு அனுப்பிட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News October 16, 2025

நாகையில் அரசு சார்பில் இலவச பயிற்சி

image

நாகையில் நேற்று (அக்டோபர் 15) அன்று அலை நீர் சறுக்கு, படகு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவா்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு தோ்வு செய்யப்பட்டு, ராமநாதபுரம், சென்னை ஆகியவற்றில் உள்ள நீா் விளையாட்டு அகாதெமிகளில் அரசு சாா்பில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு, 2026இல் நடைபெற உள்ள மாநில மற்றும் தேசிய அளவிலான நீா் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தயாா்படுத்தப்படுவா்.

News October 16, 2025

நாகை வணிகர்களுக்கு கடும் எச்சரிக்கை

image

நாகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, காரம் உள்ளிட்ட பலகாரங்கள் விற்பனையில் ஈடுபடுவோர் உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் விற்பனை செய்யக்கூடாது. இது கண்டறியப்பட்டால் சம்பவயிடத்திலேயே அபராதம் விதிப்பதுடன், வணிக உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பிரவின்குமார் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!