News January 7, 2025

முழு நிலை மருத்துவ படிப்பில் கட் ஆப் மதிப்பெண் குறைப்பு

image

புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது 2கட்ட கலந்தாய்வு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் காலி இடங்கள் அதிகமாக இருப்பதால் இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவுப்படி நீட் கட் ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டு உள்ளது.

Similar News

News September 11, 2025

புதுவை ரெப்கோ வங்கியில் அடமான கடன் முகாம்

image

புதுவை, ரெப்கோ வங்கியில் அடமானக் கடன் முகாம் வரும் 30ம் தேதி நடக்கிறது. நேற்று நடந்த துவக்க நிகழ்ச்சிக்கு வங்கியின் கூடுதல் பொது மேலாளர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். முகாமில் வியாபார அபிவிருத்தி, வீடு வாங்க, கட்டுமானம், பராமரிப்பு, திருமண செலவு, அனைத்து குடும்ப தேவைகள், பிற வங்கியில் உள்ள கடனை மாற்றி அதிகப்படியான கடன் பெறுதல், அனைத்து தேவைகளுக்கும் கடன் வழங்கப்படுகிறது.

News September 11, 2025

புதுவை: பி.டெக். படிப்புக்கு 17ஆம் தேதி நேரடி சேர்க்கை

image

புதுவை பல்கலைக்கழக பதிவாளர் ரஜ்னீஷ் பூடானி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் புதுவை பல்கலைக் கழகத்தில் கியூட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பி.டெக் எனர்ஜி சயின்ஸ், மெட்டீரியல் சயின்ஸ் படிப்புகளில் காலியாக உள்ள இடங்கள் நேரடி மாணவர் சேர்க்கை மூலம் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் வரும் 17ஆம் தேதி காலை 10 முதல் 12 மணி வரை விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News September 11, 2025

புதுச்சேரியில் பொதுமக்களிடம் ரூ.50 கோடிக்கு மேல் மோசடி

image

புதுச்சேரியில் காமராஜர் சாலையில் “கோ ப்ரீ சைக்கிள்” என்ற பெயரில் இயங்கி வரும் நிறுவனம் மோசடி செய்ததாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் ரூ.50 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக “கோ ப்ரீ சைக்கிள்” நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அமலாக்கத்துறை அதிகாரிகளால் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!