News April 7, 2024
முழு அரசு மரியாதையுடன் தகனம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி நேற்று காலமானார். இதைத்தொடர்ந்து அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று அவரது சொந்த ஊரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும் இறுதிச் சடங்கு முடியும் வரை அமைச்சர் க.பொன்முடி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் R.இலட்சுமணன், மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
Similar News
News July 6, 2025
விழுப்புரத்தில் அலுவலக உதவியாளர் வேலை

விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பழங்குடி பிரிவினருக்கான ஒரு அலுவலக உதவியாளர் (குறைவுப் பணியிடம்) நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஜூலை 25, 2025 அன்று மாலை 5:00 மணிக்குள் “வேலைவாய்ப்பு விண்ணப்பம் – அலுவலக உதவியாளர், விழுப்புரம்” என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.viluppuram.nic.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
News July 6, 2025
விழுப்புரம் மாணவர்களுக்கான போட்டிகள்

தமிழ்நாடு நாளை நினைவுகூறும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் 10ம் தேதி விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
News July 6, 2025
விழுப்புரம்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஜுலை 5 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.