News October 14, 2025
முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்

முல்லைப் பெரியாறு அணையை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்போவதாக திரிசூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் கிடைக்க பெற்றுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றதும் காவல்துறையினருடன், வெடிகுண்டு சோதனை நிபுணர்களும் இணைந்து நேற்று (அக்.13) அணை பகுதி முழுவதும் சோதனை நடத்தினர். பின்னர் மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது. இடுக்கி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 14, 2025
தேனி: ரயில்வேயில் வேலை..இன்றே கடைசி

இந்தியா ரயில்வேயில் 368 Section Controller காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-33 (SC/ST-38, OBC-36)
5.கடைசி தேதி: 14.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 14, 2025
தேனியில்..பரபரப்பு நகைக்காக நண்பன் கொலை

உப்புக்கோட்டையை சேர்ந்தவர் நவீன்குமார் (25). அதே பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (27) இவர்கள் இருவரும் நண்பர்கள். அக்.,6.ல் வீட்டை விட்டு சென்ற நவீன்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வீரபாண்டி போலீசார் நடத்திய விசாரணையில் குணசேகரன், நவீன் குமாரை வெட்டி கொன்று அவர் அணிந்திருந்த 2 சவரன் நகையை பறித்து உடலை முல்லை ஆற்றில் வீசியது தெரிய வந்தது. போலீசார் உடலை கைப்பற்றி அவரை கைது செய்தனர்.
News October 14, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 13.10.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை போடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.