News March 24, 2024

முறையான ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்

image

உத்தமபாளையம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே இன்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் பிடிஓ நாகராஜ் மற்றும் காவல்துறை ஒருங்கிணைந்து வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட காரை சோதனையிட்டதில் அதில்  ரூ.70000 உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக பணத்தை பறிமுதல் செய்து உத்தமபாளையம் சார்நிலை கருவூல அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News December 11, 2025

தேனியில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

image

தேனி மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை (11.12.2025) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சின்னமனூர் டவுன், பாலவராயன்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி, அம்மாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. SHARE IT.!

News December 11, 2025

டிச.15 ல் நிலைப்பாட்டை அறிவிப்பேன் ஓ.பி.எஸ்

image

சென்னையில் இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டம் குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க முயன்ற நிலையில் இதுகுறித்து டிச.15 ல் தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிப்பேன் என தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

News December 10, 2025

தேனியில் மாணவர்களுக்கு ரூ.2 கோடி கல்விக்கடன்

image

தேனி அருகே வடபுதுபட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில், இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பாக கல்வி கடன் முகாம் நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி கடன் குறித்து எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து 56 மாணவர்களுக்கு இரண்டு கோடியே 56 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கினார். இதில் துறை சார்ந்த அலுவலர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

error: Content is protected !!