News April 7, 2025

முறையாக Log Out செய்ய அறிவுறுத்தல் 

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் பொது மக்கள் தங்களது வங்கி கணக்குகளை இணையத்தில் வங்கி தளங்களை பயன்படுத்திய பின்னர் முறையாக Log Out செய்து வெளியே வரவும். இல்லையெனில் தரவுகள் திருடப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Similar News

News April 8, 2025

இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள்

image

திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட 07.04.2025 இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ஆம்பூர் பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினருடன் தொலைபேசி எண் மற்றும் அவர்களின் பெயரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதனை மேல உள்ள படத்தில் காணலாம். 

News April 7, 2025

திருப்பத்தூரில் குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி 

image

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு பதவிகளுக்கான ஒருங்கிணைந்த TNPSC GROUP IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் ஏப்.15ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. விபரங்களுக்கு 04179-222033 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். சூப்பர் வாய்ப்பு, மிஸ் பண்ணிராதீங்க. ஷேர் பண்ணுங்க. 

News April 7, 2025

அனைத்து கடைகளிலும் தமிழ் பெயர் பலகை வைக்க உத்தரவு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள, அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், அனைத்து தொழிற்சாலைகளிலும், தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் எனவும், மே 15 ஆம் தேதிக்குள் திருப்பத்தூர் மாவட்டத்தில் முழுவதும் தமிழ் பெயர் பலகை வைக்க வேண்டும் எனவும், தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சிவசௌந்தரவல்லி இன்று (ஏப்ரல்.07) அறிவித்துள்ளார்.

error: Content is protected !!