News November 16, 2024
முறைகேடு செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை

புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் மாதந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது சென்டாக் மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி கலெக்டர் குலோத்துங்கனிடம் அளித்த மனுவில் சென்டாக் மருத்துவ படிப்பில் என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டு 2ம் கட்ட கலந்தாய்வில் 37 மாணவர்களில், பலர் போலி சான்றிதழ் சமர்பித்துள்ளனர் சான்றிதழ்களை ஆய்வு செய்து முறைகேடு செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்றார்
Similar News
News September 13, 2025
புதுவை: அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணி அறிவிப்பு

புதுச்சேரி அரசு ஆரம்ப பள்ளிகளில் காலியாக உள்ள 190 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹே பிராந்தியங்களில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிகளில் காலியாக உள்ள பி.எஸ்.டி., ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 15-ம் தேதி காலை 10 மணி முதல் https://recruitment.py.gov.in என்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். SHARE IT!
News September 13, 2025
புதுவை: கூலித்தொழிலாளி தற்கொலை

புதுவை, வில்லியனுார் கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கோபால். இவர் கடந்த மூன்று மாதங்களாக வயிற்று வலியால் பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் நேற்று மதியம் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News September 13, 2025
புதுவை அரசு பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் துவக்கம்

பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ் இலக்கிய மன்றம் திறப்பு விழா நடந்தது. தமிழ் துறை சார்பில், பாரதியாரின் 104ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, தமிழ் இலக்கிய மன்றம் திறப்பு விழா, நல்லாசிரியர் விருது பெற்ற கலவை கல்லூரி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் ஜெஸ்டின் ஆரோக்கியத்திற்குப் பாராட்டு விழா நடந்தது.